கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோவென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாகிவிடுகிறது.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.
இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.
கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...