லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது.
தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும்
ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட
கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம்
எழுதி உள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசின் பதவி காலம்,
2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, 2019 ஏப்ரல் அல்லது அதற்கு முன்,
லோக்சபா தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, அரசியல்
கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்த
தயாராகி வருகிறது.அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் பணிகள்
துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை கண்காணிக்க, மண்டல அளவில் குழுக்கள்
அமைக்கப்பட உள்ளன. இதில், மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துள்ள அதிகாரிகள்
நியமிக்கப்படுவர்.அதே போல, ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும்
அலுவலர்கள்நியமிக்கப்படுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள்
நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள்,
ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு,
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார்
செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில்,
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக
முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல்
அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட
கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...