ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய விகிதத்தை உயர்த்த கோரி, ரத்த தானம், உறுப்பு
தானம் செய்யும் போராட்டம் நடத்த போவதாக, இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்
அறிவித்துள்ளது.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின், மாநில
தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலர் ராபர்ட் வெளியிட்டுள்ள
அறிக்கை:அரசு பள்ளிகளில், 2009 மே, 31ல் நியமிக்கப்பட்ட இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், ஜூன், 1ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு,
மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில்,
அடிப்படை ஊதியத்தில், 3,170 ரூபாய் சம்பளம் குறைந்துள்ளது.ஒரே கல்வி தகுதி,
ஒரே பணியில் உள்ள இந்த வேறுபாட்டை களைய, இடைநிலை ஆசிரியர்கள், பல்வேறு
போராட்டம் நடத்தியுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, வரும், 25ல், உண்ணாவிரத
போராட்டம் நடத்தப்படும். அதன்பின், டிச., 4ல், இரண்டாம் கட்ட போராட்டமும்,
டிச., 23 முதல், சென்னையில் குடும்பத்துடன் தொடர் போராட்டமும்
நடத்தப்படும்.முதலில், குடிநீர் அருந்தாமலும், பின், ரத்த தானம் செய்தும்,
அதை தொடர்ந்து, ஆசிரியர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தும், எதிர்ப்பை
காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» இடைநிலை ஆசிரியர்கள் உறுப்பு தான போராட்டம்
இனிமேலாவது பார்க்குமா அரசு?
ReplyDelete