கஜா' புயல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து, 'புயல்' ராமச்சந்திரன் என்ற, வானியல்மற்றும் வானிலை கணிப்பாளர், 2017 ஜூலையிலேயே கணித்துள்ளார்.
அவர், ஜூலையில் தயாரித்து வெளியிட்ட முன் கணிப்பில், 'நவம்பரில், மூன்று புயல்கள் உருவாகும்' என, கூறியுள்ளார்.நவ., 5 முதல், 10க்குள் நாகையில், ஒரு புயல்; நவ., 13 முதல், 18க்குள், நாகை அருகே, தீவிர புயல் மற்றும் நவ., 22 முதல், 26க்குள் மூன்றாவது புயல் உருவாகும் என, கணித்துள்ளார். நவ., 29 - டிச., 2; டிச., 5 - 10; 12 - 17; டிச., 21 - 24 ஆகிய தேதிகளுக்குள், தமிழகம், கேரளாவுக்கு அதிக மழை பெய்யும். அதேபோல், டிச., 29 முதல், ஜன., 1க்குள் புயல்
உருவாகும். இது, துாத்துக்குடி மற்றும் தொண்டி இடையே, கரையை கடக்கும் என, கணித்து
உள்ளார்.
உருவாகும். இது, துாத்துக்குடி மற்றும் தொண்டி இடையே, கரையை கடக்கும் என, கணித்து
உள்ளார்.
இந்த கணிப்பில், நவ., 13 - 18க்கு இடையில், நாகையை சுற்றி, தீவிர புயல் தாக்கும் என, அவர் கணித்ததை உறுதி செய்யும் வகையில், 'கஜா' தாக்கி சென்றுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...