நம் உடலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலும் சில நேரங்களில் அலட்சியமாக விட்டால் நம் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
அந்தவகையில் உடலில் இரத்தகட்டி இருந்தால் வெளிபடுத்தும் அறிகுறிகளை தெரிந்து கொண்டு அதனை எப்படி சரிசெய்யலாம் என்பதை பார்ப்போம்
கால் வலி
கால் வலி அல்லது மென்மையான வீக்கம் போல உண்டாவது. இது ஆழமான இரத்த உறைவு உண்டாகியிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறி, சிலநேரங்களில் தசைப்பிடிப்பினால் கூட இவ்வாறு ஏற்படலாம்.
தொடர்ந்து இருமல்
எந்தவொர காரணமும் இன்றி தொடர்ந்து இருமல் வருவது, ஒருவித படபடப்பு, மார்பில் வலி மற்றும் மூச்சுத்திணறல் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மூச்சுவிடுவது சிரமம்
நுரையீரலில் இரத்த கட்டி இருந்தால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும், இழுத்து ஆழமாக மூச்சுவிடும் போது இதயத்தில் வலி உண்டாகும்.
சருமத்தில் சிவப்பு கோடுகள்
இரத்த நாளத்தின் பாதை வெளிப்புறத்தில் சிவப்பு கோடுகள் ஏற்படும், கை, கால்களில் சிவப்பு கோடுகள் உள்ள இடம் சூடாகவும் இருக்கும்.
வீக்கம்
நோயின் தீவிரம் அதிகமாக இருப்பின் கை, கால்களில் வீக்கம் தென்படும். மேலும் இதனால் கை மற்றும் கால்களில் வலி காணப்படும்.
நெஞ்சு வலி
நுரையீரலில் இரத்த கட்டி உண்டாகினால் இழுத்து, ஆழமான மூச்சு விடும் போது இதய வலி உண்டாவது. மேலும் இந்த நிலை முற்றுவதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...