(சீ.ஹரிநாராயணன்)
நாம் இப்போது எளிதாகப் பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதம் எப்படி பிறந்தது என்று தெரியுமா?
கி.மு.
200-ல் பழைய துணிகள் மற்றும் மீன் வலைகளைக் கொண்டு காகிதம்
தயாரித்தனர். துணிகளைக் கொண்டு செய்யப்படுவதால் இதன்
தயாரிப்பு செலவு அதிகமாகவும், அளவு குறைவாகவும் இருந்தது.
300
ஆண்டுகளுக்குப் பிறகு மரப்பட்டைகளையும், தாவர நார்களையும்
சேர்த்து காகிதம் தயாரிக்கும் முறையை அறிஞர் சாய் லுன்
என்பவர் கண்டுபிடித்தார்.
எனினும்
தரமான, மலிவான காகிதம் தயாரிக்கும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல நூற்றாண்டுகள் கழிந்தன.
இந்த
நிலையில்தான் , 18-ம் நூற்றாண்டில் ரெனி டி ரீமர் என்பவர் ஒருவகை
குளவியைக் கவனித்தார். அவை, மரத் துணுக்குகளை மென்று அரைத்து, பின்னர்
அந்தக் கூழைத் துப்பி விடுகின்றன. அந்த கூழை வைத்து அவைகள் வீடு
கட்டிக்கொள்வதைக் கண்டார். ஆக, மரக்கூழை நன்கு மசித்தால் நாம்
விரும்பும் உருவம் பெறலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு காகிதம்
தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தார் ரெனி டி ரீமர்.
ஆக, காகிதம் தயாரிக்கும் முறை ஒரு குளவியிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொண்டோம்.
மரத்தை எப்படி சரியாக அரைத்து காகிதம் தயாரிப்பது என்று கெல்லர் என்பவர் கண்டுபிடித்தார்.
ஒரே
மரத்தில் இருந்து பல வகையான காகிதங்களைத் தயாரிக்கலாம். அதாவது,
ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு வகையான இயந்திரம், வேதிப்
பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, விதவிதமான காகிதங்கள்
தயாரிக்கப்படுகின்றன.
உயிர் மூச்சு
காகிதம் காப்போம்!
ஆதி வள்ளியப்பன்
ஒரு நாளில் எவ்வளவு வீணடிக்கிறோம் என்பதை உணராமலேயே நாம் கழிவாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்: காகிதம்.
நீங்கள்
இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த நாளிதழ், குறிப்பு எழுதப்
பயன்படுத்தும் சிறு நோட்டு, உங்கள் மகனோ, மகளோ பள்ளிக்கு எடுத்துச்
செல்லும் நோட்டுப் புத்தகம், அலுவலகத்தில் நாம் பயன்படுத்தும் கோப்புகள்...
இவை அனைத்துமே காகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை.
உலகெங்கும்
காகிதப் பயன்பாடு ஆண்டுதோறும் 20 % அதிகரித்துவருகிறது. அலுவலகப்
பணியாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக தினசரி 50 ஷீட்களை அதிகம் பயன்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காகிதப் பயன்பாடு இப்படி
கண்மண் தெரியாமல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், கணினிகளும்
நகலெடுக்கும் கருவிகளும் அதிகரித்திருப்பதுதான்.
இதில்
விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் காகிதத்தைவிட, நாம் உருவாக்கும்
காகிதக் கழிவுதான் அதிகம். ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் கழிவாக மாறும்
காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ.
மரங்களின் அழிவு
இந்த
இடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆயிரம் கிலோ
காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், 2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை.
அதேநேரம்
ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் அழிவது குறையும்
(17 முதிர்ந்த மரங்கள்), தண்ணீர் பயன்பாடு குறையும் (30,000 லிட்டர்),
ஆற்றல் தேவை குறையும் (3 படுக்கையறை கொண்ட வீட்டுக்கு ஆண்டு முழுவதும்
தேவைப்படும் மின்சாரம்), மாசுபாடு குறையும் (95 % காற்று மாசுபாடு),
காகிதக் குப்பையும் குறையும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...