Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்டினல் தீவு பழங்குடியினர் அம்பினால் குறிவைத்ததால் திரும்பிய போலீஸ் அமெரிக்கர் சடலத்தை மீட்க புதிய முயற்சி...


அந்தமானின் வடக்கு சென்டினல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வெளியுலகினருடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், தங்கள் பகுதிக்குள் நுழையும் அன்னியர்களை அம்பெய்தி கொன்று வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் வாழும் இந்த பழங்குடியினரை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்துள்ள மத்திய அரசு, வடக்கு சென்டினல் தீவுக்கு அன்னியர்கள் யாரும் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது.

 இந்த தடையை மீறி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் (வயது 27) என்ற அமெரிக்கரை பழங்குடியினர் கொன்றுவிட்டனர்.

இந்த தடையை மீறி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் (வயது 27) என்ற அமெரிக்கரை பழங்குடியினர் கொன்றுவிட்டனர்.

இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீஸ் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதற்கு ஆலனுக்கு உதவிய 7 மீனவர்களை கைது செய்துள்ளது.
சென்டினல் பூர்வகுடிகளான பழங்குடியினர் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப்பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள். கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை நோக்கி செல்வதே ஆபத்தானதாகும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கரின் உடலை மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உடலை மீட்க போலீஸ் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பழங்குடியினர் வில், அம்புவுடன் குறிபார்த்த நிலையில் போலீசார் படகுடன் கரை திரும்பினர். 







மானுடவியலாளர்கள் உதவியுடன் அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கரின் சடலத்தை மீட்பது என்பது எளிதான காரியம் கிடையாது, பாதுகாக்கப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக எந்தஒரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது எனவும் மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.





 சில ஆண்டுகளுக்கு முன்பு மானுடவியல் ஆய்வாளர்கள்  சென்டினல் தீவுக்கு சென்று பழங்குடி மக்களிடம் அன்பாக பேசியுள்ளனர். இதேபோன்ற நகர்வை முன்னெடுக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவும் இப்போது எளிதானது கிடையாது என வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே அவர்களை சந்தித்து பேசிய அதே மானுடவியல் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள போலீஸ் டிஜிபி தீபேந்திர பதக்,  பழங்குடி மக்களிடம் நட்புடன் பழகுவது குறித்து அவர்களிடம் கேட்டு தகவல்களை பெறவுள்ளோம். ஒருவேளை சம்மதித்தால் அவர்களையும் அழைத்து கொண்டு நார்த் சென்டினல் தீவுக்கு செல்ல பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு அவர்கள் வந்தால் அமெரிக்கர் ஆலனின் உடலை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.




Source  Dinathanthi




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive