குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல்ப்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
சமூக சேவகரும், தொண்டு நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் பாஜ்பாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும், “மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வனவளம் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. தேவைகள் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. அதனால், 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது. இந்த திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று(நவம்பர் 5) நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை அரசு நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு யோசனை கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...