தெற்கு அந்தமானின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த சில நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தெற்கு அந்தமானின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது, இது மேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும்.
கஜா புயலால் மழைகிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வடதமிழக மாவட்டங்களுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நல்ல மழைகிடைக்கும்.
டெல்டா மண்டலங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு சென்னையில் மிக கனழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கன மழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிக கன மழையும் இருக்கும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுவதற்கான கால சாத்தியம் இல்லை. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது. இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் வந்திகளை நம்ப வேண்டாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...