அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை யன் பேசியதாவது:
மாணவர்களின் நலனுக்காக தமி ழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ் வொரு பள்ளியிலும் நவீன அறிவி யல் பரிசோதனைக் கூடம் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் வரும் டிசம் பருக்குள் 625 பள்ளிகளில் ஏற்படுத் தப்படும். மாணவர்கள் மேலைநாடு களில் உள்ள அறிவியல், கலாச் சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை வௌிநாடுகளுக்கு அனுப்ப உள் ளோம்.
சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்வதில் குளறுபடி வந்துள்ள தான புகாரையடுத்து, தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத் தில் பணியாற்றிய ஆசிரியர் கள், இத்தேர்வை எழுதிய விதவை ஆசிரியர்கள் ஆகியோருக்கு 4 வார கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று எங்களுக்கு அனுப்பி வைக்க உத் தரவிடப்பட்டுள்ளது. 4 வாரத்துக் குள் வழங்கவில்லை எனில் பொதுப் பிரிவில் உள்ளவர்கள் நிய மிக்கப்படுவார்கள்.
அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, நவம் பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரள மாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
விழாவில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய சென்னை எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகந்நாதன், மெட் ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குநர் ச.கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...