தமிழக அரசு, சுற்றுலாத்துறை
சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தில் மதுரையில் இருந்து 150 மாணவர்கள் சுற்றாலா சென்றனர். இந்த திட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் சுற்றுலா கனவுகள் நிறைவேற்றப்பட்டுவருகிறது.
*தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து நேற்று 150 மாணவர்கள் சுற்றாலா விழிப்புஉணர்வில் கலந்துகொண்டனர்*
*இது தொடர்பாக மதுரை சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ”அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிவருகின்றனர். ஆனால் தனியார் பள்ளி மாணவர்களைப் போல் சுற்றுலாத் தலங்களுக்கோ, வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்கோ வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது
*இந்நிலையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களைச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று விழிப்புஉணவர்களை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா தலங்களின் முக்கியதுவம், நினைவுச் சின்னங்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன்படி மதுரையில் அரசு பள்ளி மாணவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்*
*அதன்படி சிவகங்கை மாவட்டம் மடப்புரத்து காளி கோயில், இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலயம், மதுரை உலக தமிழ் சங்கம், சங்கத் தமிழ் காட்சி கூடம் மற்றும் காந்தி அரண்மனை, திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட வைத்து விநாடி வினாக்களும் போட்டிகளும் நடத்தப்பட்டது
*மாணவர்களுக்கு உணவு ஏற்பாடுகளும் தோள்பை, தொப்பி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் சுற்றுலா கனவுகள் நிறைவேற்றப்பட்டுவருகிறது” என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...