தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் பல பிரச்சினைகளிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில் பீட்ரூட்டை சாப்பிடும்போது,அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.
பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது,வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி,பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை விரியச்செய்து உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்:
*பீட்ரூட்டில் தண்ணீர்-87.7 சதவீதம் ,புரதம் -17 கிராம்,கொழுப்பு-0.1கிராம் தாதுக்கள் 0.8மி.கிராம்,நார்ச்சத்து 0.9 கார்போஹைட்ரேட் 0.8சதவீதமும்,கால்சியம் 18 மி.கிராம்,பாஸ்பரஸ்-5.5மி.கிராம்,இரும்புச்சத்து 10,விட்டமின் சி 10மி.கிராமும் உள்ளன.
*விட்டமின் ஏ மற்றும் பி1,பி2,பி6 நியாசின்,வைட்டமின் ஆகியவற்றுடன் சோடியம்,பொட்டாசியம்,கந்தகம்,குளோரின்,அயோடின் ,தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
மருத்துவ பயன்கள்:
*பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.
*பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்,மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும்.
*பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும்,பித்தப்பையும் சுத்தகரிக்கப்படும்.
*தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரவில் குணமடையும்.
*பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும் பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
*இரத்ததின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
*பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தேய்த்து உண்டுவர,ரத்ததில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
*பீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு அதை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
*கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு நல்ல மருந்தாகும்.
*பீட்ரூட் ரத்தசோகையைக் குணப்படுத்தும்,மலச்சிக்கலைப் போக்கும்,பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...