அரசு பள்ளிகளில் பணியாற்றும்,
பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், போலி சான்றிதழ் அளித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விசாரணை நடத்த, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட, பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓவியம், தையல், உடற்கல்வி, தோட்டக்கலை, இசை உள்ளிட்ட சிறப்பு பாட பிரிவுகளுக்கு, பாடங்கள் நடத்துகின்றனர்.
அதேபோல், மற்ற பாட பிரிவுகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.இந்த ஆசிரியர்களில் சிலருக்கு, சரியான கல்வி தகுதி இல்லை என்றும், சிலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றுவதாகவும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார், பள்ளிக் கல்வி துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், குழுக்கள் அமைக்க, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த குழுக்களில், பாட வாரியாக கண்காணிப்பாளர்கள் மற்றும் நம்பகத்தன்மை மிகுந்த தலைமை ஆசிரியர்கள், தலா, 20 பேர் நியமிக்கப்படுகின்றனர். வரும், 28ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை, மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...