நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்.. ஆனா, பஸ் புடிச்சு ஊருக்கு வந்து சேருவது என்னவோ திண்டாட்டம் தான். எப்படியோ அடிச்சுப் புடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்தாச்சு. சரி.. அப்படியே நம்ம வாசகர்களுக்கு, தீபாவளியின் ஹிஸ்டரியை லைட்டா ஷேர் பன்னுவோமே தோணுச்சு… அதற்கு தான் இந்தக் சிறிய கட்டுரை.
எஸ்டிடி-னா வரலாறு தானே-னு கேட்கக் கூடாது. சரியா…
தீபாவளி என்றால் என்ன-னு விளக்கம் கேட்டால், ‘தீபத்தின் ஒளி’ என்று நாம் சொல்வோம். அதான் சரியும் கூட.. இதற்கு வடநாட்டில் கொஞ்சம் லைட்டா வேற மாதிரி மீனிங் வச்சு விளக்கம் கொடுக்குறாங்க.
Deepavali என்றால் Deep-ஒளி, avali – வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருப்பது.
அதாவது, வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளியாம்…
அப்படியே நரகாசூரன் கதையை கொஞ்சம் சொல்லி வைப்போம். இப்போ உள்ள 2k கிட்ஸ்-க்கு PUBG கேம் விளையாடுறதுக்கே நேரம் இல்ல.. இதுல நரகாசூரன் கதை எங்கே தெரிஞ்சிருக்கப் போகுது? ஸோ, இங்க அந்த கதையை சொல்றோம்.. கேட்டு தெரிஞ்சிகோங்க.
இதிகாச கதைகளின் படி, இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.
நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு அவனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.
கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.கல்விச்சுடர்
கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட. ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன்.
பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம். ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்ததாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...