வங்கக் கடலில் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி நாளை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காற்று பலமாக இருக்காது என்றாலும், நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது புயலாக மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் புயல் உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சில வேளைகளில் இது வலுவிழந்த புயலாக கூட மாறக்கூடும். தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்வதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களை பொறுத்த வரையில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும்.
காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடக்கூடும். வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும்.
இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22 ஆம் தேதி வரை நீடிக்கும். 23 ஆம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்' என்று வானிலை தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்
Ohhh
ReplyDelete