ஸ்மார்ட்போன் தயாரிக்கும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், இந்தியாவின் முதல் கூகுள் சான்றிதழ் பெற்ற ஆண்ட்ராய்டு டிவியை நேற்று (நவம்பர் 2) அறிமுகம் செய்தது.
4K அல்ட்ரா HDR தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்டு டிவிக்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு வடிவங்களில் வெளியாகியுள்ளன. ரூ.51,900-ல் தொடங்கி ரூ.61,990வரை விற்பனைக்கு வந்துள்ள இந்த டிவிக்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரோகன் அகர்வால், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு HD தரத்துடன் கூடிய சிறந்த அனுபவத்தை வழங்கும் பொருட்டு கூகுள் சான்றிதழ் பெற்ற ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த டிவியின் திரை தெள்ளத் தெளிவாக இருப்பதால் அதில் தெரியும் படங்கள் மிகவும் பெரியதாகவும், கூர்மையாகவும் இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் மேலும் பல வசதிகளை உட்புகுத்தி இந்திய சந்தையில் எங்களுக்கென தனித்த இடத்தைப் பிடிக்க காத்திருக்கிறோம்" என்று கூறினார்.
ஆண்ட்ராய்டின் தற்போதைய வெர்சனான ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில் டால்பி மற்றும் DTS ஒலியமைப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் quad-core Cortex-A53 ப்ராஸஸர், 2.5GB DDR3 RAM மற்றும் 16GB storage இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...