சென்னை :சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, எட்டு
மாதங்களாக, சம்பளம் வழங்காததால், கட்டண கமிட்டியின் பணிகள் பாதிக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை
சட்டத்தின்படி, அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கான கல்வி
கட்டணத்தை நிர்ணயிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக சுயநிதி
பள்ளி கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது.தற்போது, இந்த கமிட்டி யின்
தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணி
செயல்படுகிறார்.
கட்டண கமிட்டி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கூடுதலாக, இணையதளம்
மற்றும் கணினி இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கல்வி
கட்டண கமிட்டி தலைவர், சிறப்பு அதிகாரி மற்றும் கணினி ஊழியர்கள் உள்ளிட்ட
அனைவருக்கும், எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காமல் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வி துறை வழியாக, பல முறை கடிதம்
எழுதியும், நிதி துறையின் அலட்சியத்தால், சம்பளம் வழங்குவதில், சிக்கல்
நீடிக்கிறது.இந்த நிலை தொடர்ந்தால், கட்டண கமிட்டி பணியை தொடர முடியாமல்,
அதன் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...