இதுநாள் வரை சென்னையில் பெய்த மழை எல்லாம் மிக குறைவு தான். இந்த நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் வெறும் 55 சதவிகிதம் மட்டுமே தான் சென்னை பெற்றுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அதிக கனமழை உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பரவலாக பொழிய வேண்டிய மழை, கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோரமுகத்தை காட்டி ஒருவழியாக்கி சென்றுவிட்டது.
இன்னும் தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இப்போது வலுவிழந்துள்ளது.
இது தொடர்ச்சியாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
வடமேற்குத் திசையில் நகர்ந்து செல்லும் போது இது வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும்.
சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.
சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
வழக்கமாக பொழியும் மழைபொழிவை விட குறைவான அளவில் பதிவாகியுள்ளதால், அடுத்த மாதம் இதன் தாக்கம் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rain rain go away
ReplyDelete