போக்குவரத்து சார்ந்த ஆவணங் களை, பயனாளிகள், 'டிஜிட்டல்' வடிவில்
காட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய சாலை போக்கு
வரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல்
போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரிக்கும் போது, லைசென்ஸ்,
பதிவுச்சான்று, வாகன உரிமம், தகுதிச்சான்று, புகைச்சான்று உள்ளிட்டவற்றை,
பயனாளிகள், டிஜிட்டல் வடிவில்காட்டலாம் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
இதற்கு, 1989 மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, தேவையான வசதிகளை
ஏற்படுத்த வும், மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.இதை, பல
மாநிலங்கள்பின்பற்றும் நிலையில், தமிழகத் தில், அசல் சான்றிதழ் வைத்திருக்க
வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை
காட்டும் முறைக்கு, மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள்
கூறுகையில், 'தமிழக அரசு, நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று, டிஜிட்டல்
வடிவில் ஆவணங்களை காட்டும் வசதிகளை நடைமுறைப்படுத்தலாம்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...