வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சமூக வலைத்தளங்களில் பிரபலமான வாட்ஸ்-அப்
செயலியை சுமார் 130 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில்
சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள். இந்த வாட்ஸ்-அப் செயலி மூலம் தவறான
வதந்திகள் பரவலாகுவதால் பல இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. இதனால்
தவறான செய்திகள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு
அதிகாரியை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்தது.
இந்நிலையில், பிரபல மின்னணு பணப்பரிமாற்ற
செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக
பணியாற்றி வரும் அபிஜித் போஸ் என்பவர்வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி
ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...