தமிழகத்தின் தென்பகுதிகள், புதுச்சேரியில் உள்ளிட்ட சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.30) மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தென்தமிழக கடற்கரையையொட்டிய பகுதிகளில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மாலத்தீவு பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தென்தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும். இதுதவிர, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யக்கூடும். இது போல, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ.: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் , ஆனைக்காரன்சத்திரத்தில் 70 மி.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலா 60 மி.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை, சேத்தியாதோப்பு, நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் தலா 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...