தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில்
அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2019-20ம் கல்வி ஆண்டில் ஆறு மற்றும்
ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களை (ஆண்கள் மட்டும்) சேர்ப் பதற்கான,
அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி 6ம் தேதி நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே, வரும் 26ம் தேதிக்குள் பெறலாம்.ஆறாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி:31.3.2019 அன்று 10 முதல் 12 வயதுடைய, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியின் 5ம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பக்க தகுதி:31.3.2019 அன்று 13 முதல் 15 வயதுடைய அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில், 8ம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை www.sainikschoolamravathinagar.edu.in அல்லது www.sainikschooladmission.in என்ற வலைதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினர் மற்றும் படைத்துறைப் பிரிவினர் ரூ.400 க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் ரூ.250க்கும் ஆன்லைன் கட்டணம் செலுத்தி மேற்குறிப்பிட்ட வலைதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.ஆறாம் வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத இயலும்.மேலும், விபரங்களுக்கு சைனிக் பள்ளியின் 04252-256246 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...