Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Arch., படிப்பில் சேர விதிகள் மாற்றம் பிளஸ் 2வில், 3 பாடங்கள் கட்டாயம்

'பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கட்டாயம் படித்திருக்க வேண்டும்' என்ற நிபந்தனை, இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.இதற்கான உத்தரவை, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்:


வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், பிளஸ், 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டா நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.பிளஸ் 2 வகுப்பை முறைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, படித்திருக்க வேண்டும். டிப்ளமா முடித்தவர்களுக்கு, பிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு, மத்திய மனிதவள அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive