பிரசவ விடுமுறை தரும்
நிறுவனங்களுக்கு கர்ப்பிணிகள் வேலைக்கு வராத 7 வாரங்களுக்கான சம்பளத்தை அரசே வழங்கும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான சம்பளத்தை வேலைவழங்கும் நிறுவனங்களுக்கு அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: மாநில அரசுகளிடம் பணியாளர் நலவரி குறைவாக இருப்பதால் அதை மத்திய தொழிலாளர் அமைச்சகமே இந்த தொகையை பிரசவ விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும். கூடுதலாக பிரசவ விடுமுறை அறிவிக்கப்பட்ட 14 மாதங்களில் பாதி காலத்திற்கான தொகையை அரசு ஏற்கும். அதன்படி மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் பெண் ஊழியர்களுக்கான 7 வார பிரசவ விடுப்புக்கான சம்பள தொகை சம்மந்தப்பட்ட வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...