திருக்குறள்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
திருக்குறள்:107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
பழமொழி
Bend the twig bend the tree
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
இரண்டொழுக்க பண்புகள்
* பிறரைப் பற்றி அநாகரீகமான வார்த்தைகளை பேச மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதே ஆகும்.
- ரஸ்கின்
பொதுஅறிவு
1.இந்தியாவின் மிகப் பெரிய நூலகம்
எது?
தேசிய நூலகம் (கொல்கத்தா)
2. இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எது?
இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா)
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
ஆப்பிள்
1. கொலஸ்ட்ராலைக் குறைக்க.
எளிதில் கரையக் கூடிய பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.
2.நீரிழிவை விரட்ட.
அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
English words and meaning
Mitigate. சாந்தப்படுத்து
Munch நிதானமாக மெல்
Mutter. முணு முணுப்பு
Myopia கிட்டப்பார்வை
Meagre. , மிகக் குறைந்த
அறிவியல் விந்தைகள்
புவி வெப்பமடைதல்
1.தினமும் 1.4 கோடி பவுண்டு எடையுள்ள கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தை அடைகிறது
2. புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்டிக் வட்டத்தில் உள்ள பனிக்கட்டி உருகுகிறது. இதனால் அங்கு கப்பல்கள் பயணிக்க முடிகிறது
3. நாம் அதிகம் உபயோகிக்கும் புதைபடிவ எரிபொருள்தான் காரணம் ஆகும்.
4. 2040 இல் கோடைகாலங்களில் துருவ பகுதியில் பனி இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்
நீதிக்கதை
முயலாமை
ஆமையை ஓட்டப்பந்தயப் போட்டிக்குக் கூப்பிட்டது முயல். ஆமையோ, ‘`நான் நடந்துவருவதே பெரிய விஷயம். இதில் ஓட்டப்பந்தயத்தில் உன்னை ஜெயிப்பது எப்படி? போட்டி என்றால் சமமாக இருக்க வேண்டாமா?’’ எனக் கேட்டது. யோசித்த முயல், ‘`நீ சொல்வது சரிதான். உனக்கு ஒரு ‘ஸ்கேட்டிங் ஷூ’ வாங்கித் தருகிறேன். நீ அதை அணிந்து ஓடி வா. நான் வெறும் கால்களுடன் வருகிறேன். அப்போது சமமாக இருக்கும் அல்லவா?’’ எனச் சொல்லி, ஸ்கேட்டிங் ஷூ வாங்கிக் கொடுத்தது.
ஆமை அதை வைத்து பிராக்டீஸ் செய்யவும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்தது. ஆனால், ‘இந்த ஸ்கேட்டிங் ஷூவின் வேகத்தை மீறி முயல் ஜெயித்துவிடுமா என்ன?’ என்ற அலட்சியத்துடன் பயிற்சியே செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து போட்டி ஆரம்பித்தது. அந்த ஸ்கேட்டிங் ஷூவை முன்பின் அணிந்து பழக்கம் இல்லாததால், தட்டுத்தடுமாறிய ஆமை, இரண்டு முறை குட்டிக்கரணம் அடித்து விழுந்தது. காயம் ஏற்பட்டதால் அங்கேயே நின்றுவிட்டது. வெற்றி இலக்கை எட்டிவிட்டு திரும்பிய முயல், ``உனக்காக ஒரு சிறப்பு வாய்ப்பை அளித்தும் அதைப் பயன்படுத்தவில்லை. ஆமையாகப் பிறந்தது உன் தவறில்லை. ஆனால், முயலாமையே உன் தவறு’’ என்றது.
பதில் எதுவும் பேசாமல் தலைகுனிந்தது ஆமை.
இன்றைய செய்திகள்
29.11.18
* காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக மின்சார வாகன திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
* மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு உயிரிழந்த மாணவி அனிதாவையும், "நீட்'டையும் இணைக்கும் வகையில் "அனீடா' (ANEETA) என்ற பெயரில் ஒரு செயலியை டில்லியை சேர்ந்த தமிழ் மாணவி இனியாள் உருவாக்கி இருக்கிறார்.
* உலகக் கோப்பை ஹாக்கி கோலாகலத் தொடக்கம் இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்.
* டாடா ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் 11-ஆவது சீசன், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று முதல் துவங்கி உள்ளது.
Today's Headlines
🌹Delhi government has issued a notice on implementing the electric vehicle project due to increase in air pollution.
🌹 Because of Ghaja storm ,exams of Madurai Kamaraj University have been postponed .It will be held on December 5.
🌹Delhi student Iniyal has created a Aneeta app , in remambarance of Anitha and to join hands of Anita and Neet.
🌹World Cup hockey starts today with great festivity .And first match started between India-South Africa
🌹11th Season of the Tata Open International Badminton Tournament started in Mumbai today.🌸
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...