வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது. வனவிலங்குகளில் உருவத்தில் பெரிய விலங்கான யானை என்ற பொருள்படும் வகையில் புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சென்னைக்கு கிழக்கே 860 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 900 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி 12 கி.மீ வேகத்தில் பயல் நகர்கிறது. ஆந்திரா கடலோர பகுதியான ராயல சீமாவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 15ம் தேதி தமிழகம், புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடலோர ஆந்திரா, ராயல்சிமா ஆகிய பகுதிகளுக்கு தற்போது அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...