தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு
தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இது தவிர, தொழில்திறன் இல்லாதோர், தொழில்நுட்ப பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் சென்னையில் உள்ளன. பட்டப் படிப்பு வரையிலான கல் வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தொழில் படிப்புகள் மற்றும் முதுகலை கல்வித் தகுதிகளை இருப்பிட முகவரிக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில் பதிவுசெய்ய வேண்டும்.
இந்த பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால்தான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண் ணிக்கை தொடர்பான விவரங்களை மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி நேற்று வெளியிட்டார்.
வேலைவாய்ப்பு அலுவலகங் களில் மொத்தம் 79 லட்சத்து 62 ஆயிரத்து 826 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 20.90 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள். 20.20 லட்சம் பேர் 18-23 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள். 27.08 லட்சம் பேர் 24-35 வயதினர். 11.36 லட்சம் பேர் 36-56 வயதினர். 6,440 பேர் 57 வயதுக்கு மேற்பட்டவர்கள். மொத்த எண்ணிக்கையில் 98,709 பேர் மாற்றுத் திறனாளிகள். பார்வையற்றவர்கள் 15,225 பேர், காது கேளாதோர், வாய் பேசாதோர் 13,672 பேர் அரசு வேலைக்காக பதிவுசெய்து காத்திருக்கின்றனர். 4.29 லட்சம் கலை பட்டதாரிகள், 5.62 லட்சம் அறிவியல் பட்டதாரிகள், 2.96 லட்சம் வணிகவியல் பட்டதாரிகள், 24 லட்சம் பொறியியல் பட்டதாரிகள், 6,216 வேளாண் பட்டதாரிகள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Source தி இந்து
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...