Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2 மாதிரி தேர்வு 3ம் தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்ட நுாலக
ஆணைக்குழு சார்பில், அரசு போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையம், மாவட்ட மைய நுாலகத்தில் இயங்கி வருகிறது. கடந்த, பிப்., மாதம் நடந்த குருப்-4 தேர்வில், மையத்தில் பயிற்சி பெற்ற, 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். செப்., மாதம் நடந்த போலீஸ் தேர்வில், மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.தற்போது, குரூப்-2 மற் றும் குருப்-3ஏ (கூட்டுறவு), குரூப்-4 (ஜெயிலர் மற்றும் கட்டுமான துறை) தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதத்துக்கு, ஆறு நாட்கள் மட்டும், சனி மற்றும் ஞாயிற்று கிழமையில், 10:00 முதல், 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி பெற்றவருக்கான, குரூப்-2 மாதிரி தேர்வு, பார்க் ரோட்டில் உள்ள, மாவட்ட மைய நுாலகத்தில், வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, மாதிரி தேர்வு நடக்க உள்ளது.தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 94860 79503, 96885 85378 என்ற எண்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என, மாவட்ட நுாலக நிர்வாகம் அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive