திருக்குறள்
அதிகாரம்:இனியவை கூறல்
திருக்குறள்99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
விளக்கம்:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
பழமொழி
Experience is the mother of wisdom
அனுபவமே அறிவின் திறவுகோல்
இரண்டொழுக்க பண்பாடு
* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.
* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்
பொன்மொழி
நான் மற்றவர்களைப் பற்றி பேசுவது என்றால் நல்ல பண்புகளை எடுத்து உரைப்பேனேயன்றி குறைகளை ஒருபோதும் கூறுவது இல்லை.
- பிராங்க்ளின்
பொது அறிவு
1.இந்தியா சீனாவை பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
மக்மோகன் எல்லைக் கோடு
2. உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் - 16
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
நெல்லிக்கனி
1. நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு.
2.தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
3.தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் பின்பற்றலாம்.
English words and meaning
Ear mark அடையாளக்குறி
Earnest. ஊக்கமான
Eject. வெளித்தள்ளு
Exultation. ஆரவாரம்
Exalt. மேன்மைப்படுத்து
அறிவியல் விந்தைகள்
சப்பாத்தி கள்ளி
* உடல் முழுவதும் முள் முள்ளாக படைக்கப் பட்ட போது கவலை பட்டேன். ஆனால் தாவர உண்ணிகள் என்னை சாப்பிட்டு விடாமல் இருக்க அமைக்கப் பட்ட பாதுகாப்பு என அறிந்து கொண்டேன்.
* எங்களது இருப்பிடம் பாலை நிலமே. நாங்கள் 2000 வகைகள் இருக்கிறோம். பாலை நிலத்துக்கு ஏற்ப எங்கள் உடல் அமைப்பு உள்ளது.
* எங்களில் சிலர் 66 அடி உயரமும் 2177 கிலோ கிராம் எடையும் கொண்டவர்கள்.
* நாங்கள் முள்ளாக இருந்தாலும் எங்களின் பூக்கள் உலகின் அழகான பூக்களில் ஒன்றாகும்
நீதிக்கதை
மனம் தளராதே
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.
இன்றைய செய்திகள்
16.11.18
* கஜா புயல் காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
* புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் வந்துள்ளது.
* நாடு முழுவதும் கிடைக்கும் பாலில் பத்தில் ஒரு பங்கு பாலில் மாசுப் பொருட்கள் கலந்திருப்பதாகச் சொல்கிறது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்.
* 2018-ல் டி20 கிரிக்கெட்டில் இதுவரை பூனம்யாதவ் 22 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இருவகை டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற சாதனை படைத்துள்ளார்.
* ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய்யை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
Today's Headlines
* Due to the Ghaja storm, Anna University postponed yesterday's exams to 22nd.
* The "TN Smart" app has been created and processed under the National Disaster Management Authority to provide information and information about the state of the storm, rain, floods and weather.
* The Food Safety and Standards Authority states that about one-tenth of milk is contaminated with milk.
* In T20 Cricket, in 2018,Poonam yadav has taken 32 wickets in 22 innings and made a record.
* India's Srikanth defeated another Indian player HS Pranay in the quarterfinals of the Hong Kong Open Badminton Championship.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...