திருக்குறள்
அதிகாரம்:இனியவை கூறல்
திருக்குறள்:94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
விளக்கம்:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
பழமொழி
உலகமே மூழ்கினும் நல்லதைச் செய்
Do well and right and let the whole world sink
இரண்டொழுக்க பண்பாடு
* முடிந்த அளவு தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பேன்.
* மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே வாங்கி என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன்.
பொன்மொழி
அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
- ஜார்ஜ் பெர்னாண்டஸ்
பொது அறிவு
1.சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராதாகிருஷ்ணன்
2. மனிதனின் ரத்த அழுத்தத்தை பதிவுசெய்ய உபயோகிக்கப்படும் கருவி எது?
ஸ்பிக்மோமானோ மீட்டர்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
கொத்தவரங்காய்
1. இதில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்துகிறது. மெக்னீசியமானது எலும்புகளுக்கு வலு சேர்த்து அதன் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
2. கலோரி குறைவாகவும் மற்ற சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
3. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
English words and meaning
Zither. இசைக்கருவி
Zeal. பெரும்கிளர்ச்சி
Zenith. உச்சம் ,உன்னதம்
Zigzag. நெளிவரி
Zest. உணர்வு
அறிவியல் விந்தைகள்
வைரம்
* நவ இரத்தினங்களில் ஒன்றாகிய நான் மிகவும் அழகும் பிரகாசமும் கொண்டவள். எனக்கு உலகின் மன்னாதி மன்னர்களும் அடிமை. நான் பெண்களால் அதிகம் மதிக்கப் படுபவள்
* உலகின் விலையேறப்பட்ட மற்றும் அதிக கடின தன்மை கொண்டவள் நான்.
* ஆனால் இப்படிப்பட்ட உன்னத நிலை அடைய நான் பட்ட பாடுகள் மிக அதிகம். அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் அதுவே எனது பிரகாசம் மற்றும் கடினத் தன்மை அடைய காரணமாயிற்று.
நீதிக்கதை
பழக்கம்
ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
இன்றைய செய்திகள்
10.11.18
* வங்கக் கடலில் அடுத்த 3 தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க துகள்களால் உருவானதான இந்த நிலவுகள், ஒளிந்திருக்கும் நிலவுகளாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
* காற்று மாசுபாடு அபாய அளவை கடந்ததால் டில்லியில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சீன ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி.
Today's Headlines
* The weather forecast for the next three days in the Bay of Bengal is likely to create a storm symbol.
* Hungarian astronomers have discovered two more moons on Earth.
These moons, which are entirely formed by particles, are said to be the hidden moons.
* Due to the high risk of air pollution, heavy vehicles have been banned from Delhi for the last three days.
* Manpreet Singh has been appointed as captain of the Indian hockey team for the World Cup.
* Chinese open badminton: Sindhu and Srikanth qualified for quarter finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...