தமிழகத்தின் முதல் 100% நெகிழி இல்லா பள்ளி.
புதுக்கோட்டை மாவட்டம்,
அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தாங்கோட்டை-மேற்கு நடுநிலைப்பள்ளியே
தமிழகத்தின் முதல் 100 %நெகிழி இல்லா பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட்
15 முதல் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கொண்டு வர தடை
விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மெட்டல் பேனா, காகித
பேனா, மெட்டல் மற்றும் மரத்தாலான ஸ்கேல் என அன்றாடம் பயன்படுத்தும்
பொருட்கள் அனைத்தும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களும்,
ஆசிரியர்களும் உணவு கொண்டு வர மஞ்சள் பை, தண்ணீர் கொண்டு வர சில்வர்
வாட்டர் பாட்டில் மற்றுமே பயன்படுத்துகின்றனர். பள்ளியில் ஆசிரியர் அமரும்
இருக்கை, குப்பைத்தொட்டி, குடிநீர் கேன் என எலக்ட்ரிகல் மற்றும்
எலக்ட்ரானிக்கல் பொருட்களை தவிர பள்ளியில் உள்ள மற்ற அனைத்து பொருட்களும்
பிளாஸ்டிக் இல்லா பொருட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 முதல்
தமிழகம் நெகிழி இல்லா மாநிலமாக மாறுவதற்கு இப்பள்ளி ஓர் விதையாக
அமைந்துள்ளது.
hey superb pa.enga schoolayum epdi matha poram
ReplyDeleteMy wishes
DeleteMy wishes
Delete