நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின்
314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.
1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
1659 – பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
1674 – மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1775 – ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.
1847 – 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.
1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.
1918 – யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.[1]
1940 – உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1944 – அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1970 – வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.
1972 – அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1975 – 729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
1975 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.[2]
1979 – வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ர இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
1989 – பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
1989 – செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.
1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
பிறப்புகள்
1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546)
1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
1759 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர் (இ. 1805)
1848 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1925)
1905 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (இ. 1965)
1906 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1987)
1906 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (இ. 1988)
1910 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், கவிஞர் (இ. 1974)
1910 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (இ. 1987)
1916 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. 2002)
1917 – சோ. தம்பிராஜா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1918 – சுந்தர் லால் குரானா, இந்திய அரசியல்வாதி
1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. 2013)
1920 – தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, இந்துத்துவாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2004)
1934 – அ. துரைராஜா, இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. 1994)
1934 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி
1935 – ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ், உருசிய வானியலாளர்
1939 – யாங் லி, சீனக் கணிதவியலாளர்
1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)
1957 – டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசியல்வாதி, துணை இராணுவக்குழுத் தலைவர்
1958 – ஆனந்த் ராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்
1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 – தரோன் எகேர்டன், ஆங்கிலேய நடிகர்
1994 – சோயி டொச், அமெரிக்க நடிகை
இறப்புகள்
461 – முதலாம் லியோ (திருத்தந்தை) (பி. 400)
1549 – மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468)
1848 – இப்றாகீம் பாசா, எகிப்தியத் தளபதி (பி. 1789)
1891 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (பி. 1854)
1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1881)
1977 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)
1982 – லியோனீது பிரெசுனேவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1906)
1995 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1941)
2006 – நடராஜா ரவிராஜ், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1962)
2013 – புஷ்பா தங்கதுரை, தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1931)
2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்
சிறப்பு நாள்
வெற்றி வீரர் நாள் (இந்தோனேசியா)

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...