Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.18

நவம்பர் 9 - National legal service day


திருக்குறள்

அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:93

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

விளக்கம்:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பழமொழி

திறமைசாலி என நினைத்தால் திறமைசாலி ஆகலாம்

 some are able because they think they are able

இரண்டொழுக்க பண்பாடு

* முடிந்த அளவு தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பேன்.
* மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே வாங்கி என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன்.

 பொன்மொழி

கல்வி

ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வெல்லாம் அந்நாட்டு இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்திருக்கிறது.

     - அரிஸ்டாட்டில்

பொது அறிவு

1.தென்னிந்தியாவின் மிக நீளமான நதி எது?

 கோதாவரி

2.  தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி 12 (விவேகானந்தர் பிறந்த தினம்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

 திப்பிலி




1. திப்பிலி  திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். 

2.மேக நோயைக் குணமாக்கும்.வாதக் கோளாறுகளைப் போக்கும்.

3. சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

English words and meaning

Yell      கூக்குரல்
Yelp.    குரைத்தல்
Yam.     சேனை கிழங்கு
Yearn.   ஆசைப்படு
Yore.     ஆதிகாலத்தில்

அறிவியல் விந்தைகள்

பனைமரம் பேசுகிறேன்
நான்-
உயரத்தால் மட்டுமல்ல;
உள்ளத்தாலும் உயர்ந்தவன்!
வெறுப்பு தரும்
கருப்புதான்
என் நிறம்!
இனிப்பு தரும்
கருப்புக்கட்டி
என் மனம்!
நுங்கு தருவேன்!
கிழங்கு தருவேன்!!
சுவையான
பதநீர் தருவேன்
கற்கண்டு தருவேன்!

தமிழ் சொற்கொண்டு
எழுத-
ஓலைச்சுவடியும்
தருவேன்!
படுக்க பாய் தருவேன்!
விசிறியும் தருவேன்!
நார் கயிறு தருவேன்!
உங்கள்-
வீட்டுக்கு விட்டமாவேன்!
சட்டமாவேன்!

நீங்கள்-
அள்ளியள்ளி
அளிக்க வேண்டாம்
ஏதும்!

என்னை-
அழிக்காமல் விட்டாலே
போதும்!
வணங்குகிறேன்
நண்பர்களே!

நீதிக்கதை

காற்று

 துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

இன்றைய செய்திகள்

09.11.18


* உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

* இந்தியாவிலேயே முதல்முறையாக திருச்சியில் 2,000 புத்தகங்களுடன் திறந்தவெளி நூலகம் அமையவுள்ளது.

* சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, 50 நாட்கள் தேசிய சித்தா தினம் கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

* உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

* ஒடிஸாவில் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

🌻 It is very proud that India has the maximum number of female pilots  in the world.

🌻An open library with 2,000 books in Trichy is to be installed  first time  in India.

🌻The Central Ayurvedic Ministry has allocated Rs 50 lakh to celebrate National Siddha Day for 50 days in an attempt to raise awareness among the people about the sidha medicine.

🌻 Indian team registered a third success in  World Junior Badminton Championship.

🌻Indian team for Men's World Cup hockey series was announced to play  on November 28 in Odissa.🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive