Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.18

திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

விளக்கம்

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

பழமொழி

A constant guest is never welcome

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

இரண்டொழுக்க பண்பாடு

* ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த வரை பொருளாலும் உடலாலும் உதவி செய்வேன்.

* என்னால் முடிந்த வரை பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

 பொன்மொழி

கடமையை உணர்ந்து செயல்படு. காலமறிந்து பணியாற்று. உடலும் உள்ளமும் அமைதியில் திளைக்கும்.

       - வேதாத்ரி மகரிஷி

பொது அறிவு

1. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி யார்?

 லீலா சேத்

2. இந்தியாவின் தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் யார்?

 ராதா மோகன் சிங்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சாமை அரிசி



1. நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.

2. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.

3. தாது பொருட்களை உடலில்  அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

English words and meaning

Vaccine.  அம்மைப்பால்
Vault.    நில  அறை
Variety. பலவகை ,மாறுபாடு
Valour.    வீரம்,தைரியம்
Valet.          வேலைக்காரன்

அறிவியல் விந்தைகள்

நீர்யானை

* பெயருக்கு ஏற்றார் போல் இது பாதி நேரம் நீரில் வாழும் விலங்கு. அவைகளுக்கு வேர்வை சுரப்பிகள் இல்லாததால் தங்கள் உடலை குளிர்விக்க நீரில் வாழ்கிறது.
* ஒரு நாளைக்கு 150 பவுண்டு எடையுள்ள புல் உண்ணும்
* 5-6 நிமிடங்கள் மூச்சை அடக்கி இருக்க கூடியது.
* உலகில  நிலத்தில் வாழும் விலங்குகளில் மூன்றாவது பெரிய விலங்கு ஆகும்.
நீதிக்கதை

புலித் தோல்

ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.

இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.

ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான்.

அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.

இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போத்தி நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.

புலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.

புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.

கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.

ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.

அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.

குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை நன்றாக அடித்துக் கொன்று விட்டார்கள்.

இன்றைய செய்திகள்

02.11.18

* தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

* தீபாவளிக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட நவ.5 வரை நியாய விலை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* இந்தியாவில் முதல்முறையாக மைக்ரோபிராசசர்களை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

* : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு துவங்கியது. ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். நவ.,30 வரை nta.ac.in மற்றும் ntaneet.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பம் செயயலாம்.

* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Today's Headlines

*Tamil Nadu, coastal districts of Puducherry have begun northeast monsoon, Chennai Meteorological Department Director Balachandran said.

* The Government of Tamil Nadu has stated that fair price shops will be opened till Nov 5 to buy essential items for Deepavali.

* For the first time in India, IIT students have created record for creating microprocessors.

* The NEET Exam Online Application for MBBS and BDS courses started. Aadar or Voter Identity Card can be applied. Applications can be filed on nta.ac.in and ntaneet.nic.in till Nov 30.

* India won the 5-ODI match against West Indies by 9 wickets. This led to a great victory in one-day series against the West Indies.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive