Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்கு சாதகமானதால் விரைவில் அரசாணை வெளியிட 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறையிடம் கோரிக்கை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசு
கடந்த 23/08/2010 ஆம் தேதியில் அமலாக்கம் பெற்றது. ஆனால் அது தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைமுறையில் வந்தது. இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்  நிரப்பிக்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த பல மாதங்களுக்குப் பின்னர் இவர்கள் TNTET  நிபந்தனைகளுக்குள் கொண்டுவரப்பட்டனர்.
TNTET 2012 ல் பற்றியதான அறிவிப்பு வந்த போதும் கூட பல மாவட்டங்களில் இது சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் TET நிபந்தனை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல் குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் ஒன்று வெளியிட்டது.
 அதன்படி இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடம் நிரப்பும் போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று அறிவித்தது.
இந்த செயல்முறைக்குப் முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் இதர பலன்கள் ஒருசில மாவட்டங்களில் தர மறுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET லிருந்து விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு இடையே அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு  இந்த TNTET நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு விலக்கு கொடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நான்கு மாதங்களில் மற்ற ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆகவே TNTET நிபந்தனை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் (individual representation) தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர். அதில் இவர்களின் நியாயமான வேண்டுகோளாக 16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் TNTET லிருந்து முழுவதும் விலக்கு தர கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பான அரசாணை விரைந்து வெளியீடு செய்து தருமாறு மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் இந்த சிக்கல்களைத் தீர்க்க செயல்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இவ்வமைப்பு கூறுவது யாதெனில் அரசாணை   வெளியீடு தொடர்பான எந்தவொரு வதந்திகளையும் நம்பாமல் கடந்த 07--09--2018 அன்று வெளிவந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு  போட்ட எந்தவொரு ஆசிரியரும் பாதிக்கப்படாதவாறான நாளான
16/11/2012 ற்கு முன்பு ஆசிரியர் பணியில்  சேர்ந்த அனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள் பங்குக்கு  விரைந்து செய்து முடிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive