ஜியோ வாட்ஸ்ஆப் விழிப்புணர்வு கேம்பைன் : வாட்ஸ்ஆப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ? கற்றுக் கொடுக்க வருகிறது ஜியோ. ஜியோ மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் இணைந்து இந்தியா முழுவதும் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. அங்கு இருக்கும் மக்களுக்கு எப்படி வாட்ஸ்ஆப் செயலியை எப்படி முறையாக பாதுகாப்பாக உபயோகிப்பது, குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் எப்படியாக வாட்ஸ்ஆப் மூலம் சுமூகமான உறவினை மேம்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க இந்த கேம்பைன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஜியோ வாட்ஸ்ஆப் விழிப்புணர்வு - 10 மொழிகளில் விளக்கப்படங்கள் அக்டோபர் 9ம் தேதி ஆரம்பிக்கும் இந்த கேம்பைன் மூலமாக இந்தியாவில் இருக்கும் 10 முக்கியமான நகரங்களில் இருக்கும் மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்கள்.
வேனில் இந்த கேம்பைன் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் சொல்லப்பட வேண்டிய செய்தி சென்ற சேருவதற்காக வீடியோ மற்றும் துண்டறிக்கைகளை தயார் செய்துள்ளது இந்நிறுவனம். வாட்ஸ்ஆப் ஸ்வைப் டூ ரிப்ளே புது அப்டேட் பற்றி படிக்க இந்தி, பெங்காலி, மற்றும் மராத்தி போன்ற இந்தியாவின் 11 முக்கியமான மொழிகளில் இந்த துண்டறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் இணையத்தில் கிடைக்கப்பெறுகிறது.
இது குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில் "ஜியோ இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த பயணத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...