ஃபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகமாகிறது.
டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரேய்ட் ஆக வைத்து எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி, அதனை பல்வேறு அடுக்குகளாகப் பிரித்து 3டி புகைப்படத்தை பயனாளரே உருவாக்கலாம். ஃபேஸ்புக்கில் உள்ள மெனுவைக் குறிக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 3டி போட்டோவை உருவாக்கும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். புகைப்படத்தில் உள்ள பின்னணி, நபர், தரை உள்ளிட்டவற்றை தனி தனி அடுக்குகளாகப் பிரித்து அவற்றின் கோணங்களையும், அவற்றுக்கு இடையே உள்ள ஆழத்தையும் மாற்றி, முப்பரிமாண முறையில் இயக்கலாம்.
இந்த வசதி இல்லாத எந்த பயனாளரும் 3டி புகைப்படத்தை காணும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. VR எனும் வர்ட்சுவல் ரியாலிட்டியிலும் இதை துல்லியமாகக் காண முடியும். கடந்த வியாழனன்று அறிமுகமான ஃபேஸ்புக் 3D புகைப்பட முறை, அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...