'தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்' எனக் கூறி, மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் மாணவர்கள்
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனிடம், நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, ``கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறோம். உயர் நிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி, தற்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றோம். பள்ளி தரம் உயர்த்தப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், வேறு பள்ளியில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சில மாணவர்கள் தேர்ச்சியே பெறவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதிப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறியுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...