சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளது
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்பில் சேர, 3,670 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளிஇடப்பட்டுள்ளது
இதில், 3,471 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும், 20 முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முடிவு செய்துள்ளது
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது
ஆயுஷ் அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள், இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்த பட்டியல், ஓரிரு நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, வரும், 20 முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...