பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில் தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு
காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற பல வைரஸ் காய்ச்சல்கள் வேகமாகப் பரவி
வருகின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 500க்கும்
மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று
வருகின்றனர். சிகிச்சைப் பலனிள்ளாமல் 20க்கும் மேற்பட்டவர்கள்
உயிரிழந்துள்ளனர். வைரஸ் காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பினி
பெண்களை மிக எளிதாக தாக்குவதால் மாநிலம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் டெங்கு கய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதிலும் குழந்தைகளுக்கு பாராசிடாமல் ஊசிகள் போடக்கூடாது என்று இந்திய மருத்துவக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...