டெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.
தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான லைசன்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் லைசன்ஸ் ஒருமாதிரி இருக்கும், ஆந்திராவில் வேறு மாதிரி இருக்கும்.
ஆனால் நம்முடைய லைசன்ஸ் வேறு வேறு மாதிரி இருந்தாலும் எல்லாம் மாநிலங்களிலும் செல்லுபடியாகும். இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.
அதன்படி வேறுவேறுவிதமான லைசன்ஸுகளுக்கு பதிலாக ஒரே மாதிரியான லைசன்ஸ் கொடுக்கப்படும். இதை வழங்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையும் கடைபிடிக்கப்படும்.
அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். பழைய லைசன்ஸை புதுப்பிப்பவர்களுக்கும் இந்த புதிய மாடல் லைசன்ஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புதிய சிப் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதை உருவாக்க போவதாக கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...