பெருமழை எச்சரிக்கையால், அரசு ஊழியர்கள்
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் பெருமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
புதுச்சேரியின் பல பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இன்று (அக்டோபர் 6) ஆய்வு மேற்கொண்டார். பேரிடர் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் தாழ்வான பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு முதல்வர் நாராயணசாமி இன்று விடுமுறை அறிவித்துள்ளார். நாளை, கண்டிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்கு, 186 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கழிவுநீர்க் கால்வாய்களில் போட வேண்டாம். மழை தொடர்பாக, இதுவரை 26 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.
புதுச்சேரி அரசு ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்கக்கூடாது என்றும், கட்டாயம் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும், அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...