Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யூசீட்’ அறிவிப்பு

மத்திய அரசின்கீழ் செயல்படும் ஐ.ஐ.டி., -மும்பை, ஐ.ஐ.டி.,-கவுகாத்தி, ஐ.ஐ.டி.,-ஐதராபாத் மற்றும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.,- ஜாபல்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களில் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான ‘அண்டர் கிராட்ஜூவேட் காமன் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பார் டிசைன் (யூசீட்) எனப்படும் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு துவங்கியுள்ளது.
படிப்பு: பாச்சுளர் ஆப் டிசைன் (பி.டெஸ்.,)தகுதிகள்: 12ம் வகுப்புத் தேர்வினை 2018ம் ஆண்டில் எழுதியவராக அல்லது 2019ம் ஆண்டில் எழுதப்போரவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கான தொழிற்கல்வி படிப்பிற்கான டிப்ளமா பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு: அக்டோபர் 1, 1994 அல்லது அதற்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அக்டோபர் 1, 1989 அல்லது அதற்குப் பின் பிறந்திருந்தால் இத்தேர்வினை எழுத அனுமதி உண்டு.விண்ணப்பிக்கும் முறை: ‘யுசீட்’ தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 பிரிவுகளில் 3 மணி நேரத்திற்கு இந்த தேர்வு நடைபெறும். நியூமரிக்கல் ஆன்சர் டைப் மற்றும் மல்டிப்பிள் செலக்சன் கேள்விகளாக இந்த 3 பிரிவுகள் அமைந்திருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே, ‘யூசீட்’ தேர்வினை எழுத அனுமதி உள்ளது. இதில் பெறும் மதிப்பெண் அடுத்த ஓர் ஆண்டிற்கு மட்டுமே செல்லும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 9

தேர்வு நாள்: ஜனவரி 19 (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை)
விபரங்களுக்கு: www.uceed.iitb.ac.in





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive