ஓய்வூதியப் பலன்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து மெல்போர்ன் மெர்செர் குளோபல் பென்சன் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘உலகம் முழுவதும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களைக் கொண்டு சேர்ப்பதற்கான கொள்கைகளை வகுப்பதிலும், நிதிப் பயன்களை ஓய்வு பெற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் மிகப்பெரிய தடுமாற்றம் நிலவுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களை ஓய்வு பெற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஓய்வூதிய அமைப்பு நிலையான வலுப்பெற்று வருகிறது.
ஓய்வூதியப் பயன்களைக் கொண்டு சேர்க்கும் 34 நாடுகளின் பட்டியலில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதன்மூலம் இந்தியா கிரேடு டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஜப்பான், சீனா, தென் கொரியா, மெக்சிகோ மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 40 குறியீடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் கிரேடு ஏ பிரிவில் 80.3 புள்ளிகளைப் பெற்று நெதர்லாந்து முதலிடத்திலும், 80.2 புள்ளிகளைப் பெற்று டென்மார்க் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஜெர்மனி 79.9 புள்ளிகளையும், ஃபிரான்ஸ் 79.5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்ற நாடுகளில் மெக்சிகோவும் (37.3 புள்ளிகள்), இந்தியாவும் (38.7 புள்ளிகள்) உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...