பாம்பு தோல் உரிப்பதில்லை சட்டை போன்ற மேல்தோலைத்தான் உரிக்கிறது . பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது காயம் அடைந்துவிடாமல் இந்தத் தோல் சட்டை பாதுகாக்கிறது. வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாட்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும். அதனால் இந்தத் தோல் சட்டையை உரித்துவிடுகிறது, பாம்பு. உட்தோலுக்கும் வெளித்தோலுக்கும் இடையே ஒருவித திரவம் சுரப்பதால் வெளித்தோல் சட்டையை எளிதாக உரித்துவிட முடிகிறது. ஓராண்டுக்கு 3 முறையாவது பாம்புகள் சட்டையை உரிக்கின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அறிவியல் அறிவோம்- பாம்பு தோல் உரிப்பது ஏன்
அறிவியல் அறிவோம்- பாம்பு தோல் உரிப்பது ஏன்
பாம்பு தோல் உரிப்பதில்லை சட்டை போன்ற மேல்தோலைத்தான் உரிக்கிறது . பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது காயம் அடைந்துவிடாமல் இந்தத் தோல் சட்டை பாதுகாக்கிறது. வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாட்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும். அதனால் இந்தத் தோல் சட்டையை உரித்துவிடுகிறது, பாம்பு. உட்தோலுக்கும் வெளித்தோலுக்கும் இடையே ஒருவித திரவம் சுரப்பதால் வெளித்தோல் சட்டையை எளிதாக உரித்துவிட முடிகிறது. ஓராண்டுக்கு 3 முறையாவது பாம்புகள் சட்டையை உரிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...