இச்சா, கிரியா, ஞானமென மூன்று வடிவ சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் அவை
நவராத்திரி. பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே, சரியான
நவராத்திரி வழிபாடு.
புரட்டாசி மாதத்தை, 'எமனின் கோரைப் பல்' என்று, அக்னி புராணம் சொல்கிறது.
கோரைப் பல்லிலிருந்து தப்பவே, நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகச்
சொல்லப்படுகிறது. புரட்டாசியின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து,
பத்தாவது நாளான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியை தான்,
வீட்டில் கொலு வைத்து, விசேஷமாகக் கொண்டாடுகிறோம். வீட்டில் கொலு வைத்தால்,
அனைத்து அம்சங்களுடன், அம்பிகை அந்த வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது
நம்பிக்கை.
கொலு பொருட்களை, பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அவற்றில், மந்திர
ஆவர்த்தி இருக்கும்.விரதம் கைக்கொள்வோர், அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு,
எட்டு நாட்களும், பகல் உணவின்றி, இரவு பூஜை முடித்து பிறகு, பால் பழம்
உண்பது நல்லது.ஒன்பதாம் நாள், மகாநவமி அன்று, பட்டினியாய் இருந்து, மறுநாள்
விஜயதசமியன்று, காலை, 9:௦௦ மணிக்கு முன், உணவு உண்ண வேண்டும். இப்படியாக
இந்த விரதத்தை, ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் எட்டு நாட்களும், சிறப்பு தோத்திரப் பாடல்களை மனமுருகி
பாடினால், அம்மன் அருள் கிடைக்கும்.இச்சா, கிரியா, ஞானம்நவராத்திரியில்
முதல் மூன்று நாட்கள், இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்
காலம். மகேசுவரி, கவுமாரி, வராகி ஆகிய தோற்றங்களில் மூன்று நாட்கள் வழிபட
வேண்டும். நடுவில் இருக்கும் மூன்று நாட்கள், கிரியா சக்தியான, லட்சுமியின்
ஆட்சிக் காலம். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாக வழிபட வேண்டும்.
இறுதி மூன்று நாட்கள், ஞான சக்தியின் தோற்றமான, சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.
சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டியாக வழிபட வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலானது,
சண்டி ஹோமம். சண்டி என்பவள், மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம்.
நாளை, நவராத்திரியின் முதல் நாள்
செய்ய வேண்டிய பூஜை முறைகள்:
அம்பாள்: சாமுண்டி
உருவம்: தெத்துப் பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து, மாலையாக கொண்டவள்
குணம்: நீதியை காக்க, குரூர குணத்துடன் இருப்பாள்
சிறப்பு: சப்த கன்னியரில், ஏழாம் கன்னி
கோலம்: பச்சரிசி மாவால், புள்ளிக் கோலம் போட வேண்டும்; சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
நெய் வேத்தியம் : காலையில் வெண்பொங்கல், மாலையில் காராமணி சுண்டல்
பூஜை நேரம்: காலை, 10:30 - 12:௦௦ மணி வரை; மாலை 6:௦௦ - 7:30 மணி வரை
மலர்கள்: தாமரை, மல்லிகை, வில்வம்
பழம்: பூஜைக்கு வருபவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பழம், வாழைப்பழம்.
தாம்பூலங்கள் : ஏழு வகையான மங்கலப் பொருட்கள் கொடுக்கலாம்.
முதல் நாள் அலங்காரம்:
இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும்.
மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள். சாமுண்டியாக அலங்காரம்
செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி இன்று, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி
தருகிறாள்.
நவராத்திரியில் ஒன்பது படிகளில் கொலு வைக்கும் முறை:
முதல் படி: ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற, தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்
இரண்டாம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்
மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களை விளக்கும், கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்
நான்காவது படி: நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஆறாவது படி : ஆறு அறிவு படைத்த, உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஏழாவது படி: மனிதனுக்கு மேற்பட்ட, மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
எட்டாவது படி: தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும், நவக்கிரக அதிபதிகள்,
பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
ஒன்பதாவது படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள், அவர்தம்
தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.
ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்
கோலமிடும் முறை:
அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள். கொலு
வைத்திருக்கும் இடத்தில், நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும்,
நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். இன்று முத்து கோலம் போடுவது மிகச்
சிறப்பு வாய்ந்தது.
முதல் நாள்:
நாளை அம்பிகையை மகேஸ்வரியாக, மது, கைடபர் போன்ற, அரக்கர்களை வதம் செய்த
கோலத்தில் அலங்கரிக்க வேண்டும். இரண்டு வயது சிறுமியை அலங்கரித்து, குமாரி
என்ற பெயரில், அம்பாளாக பூஜிக்க வேண்டும். பூஜையறையில், அரிசி மாக்கோலம்
அல்லது பொட்டுக்கோலம் இட வேண்டும். மல்லிகை, செவ்வரளி, வில்வமாலைகளை
அம்பிகைக்கு சூட்டி, வெண்பொங்கல், சுண்டல், வாழைப் பழம், எலுமிச்சை சாதம்,
தயிர்ச்சாதம், மொச்சை நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால், செல்வவளம்
பெருகும். தீர்க்காயுள் உண்டாகும்.
பாட வேண்டிய பாடல்-:
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்என் புந்தியில் எந்நாளும் பொருந்துகவே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...