இன்று மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள். இறந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றளவிலும் பெரிதும் நினைவுகூரப்படும் ஆளுமையாகவே காந்தி இருந்துவருகிறார். அவரைப் பற்றிய சில தகவல்கள்:
1. நோபல் பரிசிற்காக 5 முறை மகாத்மா காந்தி பரிந்துரை செய்யப்பட்டார்.
2. மகாத்மா காந்தி 4 கண்டங்களிலும், 12 நாடுகளிலும் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கிவைத்தார்.
3. மகாத்மா காந்தி தீவிரமாக எதிர்த்த நாடான பிரிட்டன், அவரைப் பெருமைப்படுத்தி ஒரு தபால் தலையை அவர் இறந்து 21 ஆண்டுகள் கழித்து வெளியிட்டது.
4. ஒரு நாளைக்கு மகாத்மா காந்தி 18 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்தார்.
5. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன், ஹிட்லர் உட்பட உலகின் பல பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தார்.
6. மகாத்மா காந்தி சுடப்படும்போது அணிந்திருந்த ஆடை உள்ளிட்ட அவர் பயன்படுத்திய பல பொருட்கள், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
7. மகாத்மா காந்தி இறந்துபோவதற்கு ஒரு நாளைக்கு முன்னால், காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.
8. மகாத்மா காந்தி ஆங்கிலத்தை, ஐரிஷ் மொழியின் சாயல் கலந்து (Irish accent) பேசினார். அதற்குக் காரணம், அவருடைய ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் மனிதர்.
9. இந்தியாவில் 53 பெரும் சாலைகளும் (சிறு சாலைகளை இதில் சேர்க்கவில்லை), இந்தியாவிற்கு வெளியில் 48 சிறு சாலைகளும் காந்தி பெயரால் அழைக்கப்படுகின்றன.
10. 1996ஆம் ஆண்டு முதல் அச்சடிக்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் படம் இடம்பெறுகிறது.
நன்று மிகவும் நன்று
ReplyDelete