பி.ஆர்க்., படிப்புக்கு, அடுத்த கல்வியாண்டு முதல், இருமுறை, 'நேட்டா'
நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.அகில இந்திய கட்டடக்கலை கவுன்சில் தலைவர்
விஜய்கார்க், நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு, பி.ஆர்க்., படிப்புக்கு,
நேட்டா என்ற 'நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் பார் ஆர்கிடெக்சர்' நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்பட்டு வந்த
நுழைவு தேர்வு, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், இருமுறை
நடத்தப்படுகிறது.பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், கணிதப்
பாடங்களில், குறைந்தபட்சமாக தலா, 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள்,
இத்தேர்வுக்கு தகுதியானவர்கள். 'ஆப்டிடியூட்' மற்றும், 'டிராயிங்' தேர்வு
என, மொத்தம் மூன்று மணி நேரம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» பி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்டடக்கலை கவுன்சில் தலைவர் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...