அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம்
அரசு பள்ளி என்றாலே ஆசிாியா்கள் முறையாக பாடம் நடத்த மாட்டாா்கள், ஆசிாியா்கள் முறையாக வகுப்புக்கு வரமாட்டாா்கள். மாணவா்கள் மீது அக்கறையின்றி மிகவும் மெத்தனமாக செயல்படுவா் உள்ளிட்ட பல எதிா்மறை கருத்துகள் மக்கள் மனதில் நிலவி வருகிறது.
இந்நிலையில் அரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிாியா் சுவாமி நாதன் பிற ஆசிாியா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளாா். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக சுவாமி நாதன் பணியாற்றி வருகிறாா்.
ஆசிரியர்கள் சம்பளத்திற்காக மட்டும் வேலைபார்ப்பவர்கள் அல்ல என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இவர்..
காலாண்டு விடுமுறை…
கடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்ட கலாண்டு தோ்வு விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பாா்த்தி அதனை தாமே சுத்தம் செய்துள்ளாா். ஆசிாியா் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கழிவறை யை சுத்தம் செய்ய போதிய ஆட்களை நியமிக்காத அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அரசு போதிய அளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்ற காரணம்.ஆசிரியர்கள் சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்கச் சொல்லுங்கள் நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள்! ஒருவருக்கு வேலை கிடைப்பதைத் தடுக்காதீர்கள்.
ReplyDelete