கோபி அருகே அளுக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 62 பயனாளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று விவசாய கடன் வழங்கினார்
விழாவில் அவர் பேசியதாவது:
மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளிடம், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பினருக்கு, டேப் வழங்குவது குறித்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது
*ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்
*ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்
*இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில்லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்
*திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்
33091000101000172
ReplyDelete1012768913
ReplyDelete